சட்ட பஞ்சாயத்து இயக்க செயல்பாடுகள்,
வரவு செலவுகள் அறிக்கை ...
ஏப்ரல் 2016
ஏப்ரல் 2016
http://sattam.org/monthly/ April2016.pdf
இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஏப்ரல்(2016) மாதத்திற்கான இயக்கத்தின் செயல்பாடுகள், வரவு-செலவுகள் குறித்தான அறிக்கையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஏப்ரல்(2016) மாதத்திற்கான இயக்கத்தின் செயல்பாடுகள், வரவு-செலவுகள் குறித்தான அறிக்கையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
1.
பொதுநல வழக்குகள்
2.
தொலைபேசி உதவி மையம் ( கால்சென்டர் )
3.
சனிக்கிழமை முகாம்கள்
4.
இயக்க நிர்வாகிகளுக்கு
பயிற்சிப் பட்டறை வகுப்புகள்
5. மாவட்ட செயல்பாடுகள், புதிய சக்தி அணி
6. பங்கேற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள்
7.
பத்திரிகைகளில் இயக்க செய்திகள்
8. இயக்கத்தின் சார்பாக வெளியான கட்டுரைகள்
9. வெற்றிச் சம்பவங்கள்
10.
வரவு செலவு அறிக்கை
1. பொதுநல வழக்குகள் :
1.1)
இரயில் நிலையங்களில் அடிப்படை வசதி கோரி..
பொதுமக்களுக்கு இரயில் நிலையங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்பாடு செய்துதரப்படவேண்டும் என்று நாம் தொடுத்திருந்த பொதுநல வழக்கு ஏப்ரல் 15 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரயில்வே நிர்வாகத்தை
கடுமையாகக் கண்டித்த தலைமை நீதிபதி, இவ்வசதிகளை ஏற்பாடு செய்யவில்லையெனில் இரயில்வே பொதுமேலாளார் நீதிமன்றத்திற்கு வரவேண்டி இருக்கும் என்று எச்சரித்தனர்.
இன்னும் 3 மாதத்திற்குள் அனைத்து வசதிகளையும் செய்துதரவேண்டும் என்று ஆணியிட்டதோடு வழக்கை ஜீலை 15க்கு ஒத்திவைத்தனர்.
( இவ்வழக்கில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் வாதாடினார் )
1.2)
சட்ட விரோத பேனர்கள் வைத்தது குறித்த பொதுநல வழக்கு:
நடைபாதையை மறித்து பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பான(அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது)
சட்ட பஞ்சயத்து இயக்கம் தொடுத்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில்(Affidavit) பேனர்கள் வைக்கப்பட்டதில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
1.3)
தகவல் ஆணையத்தில் விசாரணையின் போது உட்காரும் உரிமை கேட்டதற்காக கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு...
2015 ஜனவரி மாதத்தில் மாநில தகவல் ஆணையத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையின்போது மனுதாரர்களுக்கு உட்கார்ந்து பேசும் உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தியதற்காக சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். 15 மாதங்கள் கடந்தும் இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.இதுவரை நாம் 16 முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளோம். ( இந்த வழக்கில் சிவ.இளங்கோ, தன்னுடைய வழக்கிற்காக தானே வாதாடி வருகிறார்(Party in Person))
1.4) கிராம நிர்வாக அலுவலர்கள்(VAO) கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும் என்ற
விதிமுறை பின்பற்றப்படாதது குறித்த வழக்கு…
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்திருந்த பொதுநலவழக்கில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், வி.ஏ.ஓக்கள் கிராமத்தில் தங்கி பணிபுரிவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் – இந்த விதிமுறையைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும், இந்த தீர்ப்பை அரசாங்கம் சரிவர செயல்படுத்தவில்லை என்றால் மனுதாரர்(சட்ட பஞ்சாயத்து இயக்கம்) நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். பலதீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாத தமிழகதீர்ப்பு, இந்தத் தீர்ப்பையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. எனவே, உரிய ஆதாரங்கள்-ஆவணங்களைத் திரட்டி மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுவர இருக்கிறோம்.
2. தொலைபேசி உதவி மையம் ( கால்சென்டர் )
7667-100-100 என்ற தொலைபேசி சேவை மையம் மூலம் பொதுமக்களின்
பிரச்னைகளுக்கு வழிகாட்டி உதவி வருகிறோம்.
ஏப்ரல் மாதம் வந்த மொத்த அழைப்புகளின் எண்ணிக்கை: 464
ஏப்ரல் மாதம் வந்த மொத்த அழைப்புகளின் எண்ணிக்கை: 464
3. சனிக்கிழமை முகாம்கள்
தொலைபேசி உதவி மையம் மூலம்
தீர்க்கமுடியாத பிரச்னைகள், சொத்துபிரச்னை போன்ற ஆவணங்களைப் பார்த்து வழிகாட்ட
வேண்டிய பிரச்னைகளுக்காக வாரந்தோறும் சனிக்கிழமையன்று இயக்க அலுவலகத்தில்(தி.நகர்)
முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் இயக்கத்தின் வழக்கறிஞர் குழுவினர், துறை
சார்ந்த வல்லுனர்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டுவார்கள்.
ஏப்ரல் மாதத்தில் சனிக்கிழமை முகாம் மூலம் பயன்பெற்றோர்: 64 பேர்
4. இயக்க நிர்வாகிகளுக்கு பயிற்சிப் பட்டறை
வகுப்புகள் :
இயக்கத்தின் மாவட்ட
நிர்வாகிகளுக்கு ஏப்ரல் மாதம் 16,17ம் தேதியன்று பயிற்சிப் பட்டறை வகுப்புகள்
நடத்தப்பட்டன. பேச்சுப்பயிற்சி, அரசியல் சாசன அடிப்படைகள், வழக்குகளின் வகைகள்,
இயக்கத்தின் கொள்கைகள், வரவு-செலவு பராமரிக்க வேண்டிய விதம் போன்றவை குறித்தான பயிற்சிகள்
தரப்பட்டன.
5. மாவட்ட
செயல்பாடுகள் :
ஏப்ரல் மாதத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள்: 50 பேர்
திருச்சி, ஈரோடு, மதுரை, நெல்லை, கடலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் முதல் மூன்று எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து களஆய்வு(சர்வே) நடத்தப்பட்டது.
திருச்சி : ( 9943556996 )
திருச்சி மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் கூட்டம் 03/04/2016 அன்று திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்றது.
ஈரோடு : ( 88704-72176 )
வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த ஒருவரிடம் 2000 ரூபாய் இலஞ்சமாக கொடுக்க வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்திக்கப்பதாக நம் இயக்கத்திற்கு புகார் வந்தது.அந்த புகாரை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி,இலஞ்சம் இல்லாமல் வாரிசு சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை : ( 9600262260 )
தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்: அண்ணாத்துரை: 87545-88222
மதுரை இரயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த சமூக ஆய்வு 10/04/2016 அன்று நடைபெற்றது.
அவனியாபுரம் பகுதியில் 17/04/2016 அன்று மரம் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் 20/04/2016 அன்று நடைபெற்றது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகிலுள்ள கோம்பையில் சட்ட பஞ்சாயத்து இயக்க அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டது
எஸ்.எஸ்.காலனி - நாவலர் நகர் - பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் கடந்த ஒரு வருடமாக உடைந்து கிடந்த குடிநீர் குழாய் இயக்கத்தின் புகாரின் அடிப்படையில் சரிசெய்யப்பட்டது
கடலூர் : ( 9489222833 )
கடலூர் மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் புதிய கிளை 03/04/2016 அன்று திறக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 09/04/2016 அன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லை : ( 9751779999)
நெல்லை பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வேகமாக செல்லும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை காவல் ஆணையருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் 01/04/2016 அன்று புகார் அளிக்கப்பட்டது.அப்புகாரின் மீது அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்பட்டு தனியார் பேருந்துகளை தற்போது கண்காணித்து வருகின்றனர்.
**)
நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியைத் சேர்ந்த ஒருவரின் வீட்டில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் சரியான நடவடிக்கை எடுக்காமல் புகாரை நிராகரித்தனர்.நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியை அழைத்து இந்த பிரச்சனை குறித்து இயக்கம் சார்பாக முறையிட்டோம்.அடுத்த நாளே காவல்துறை பாதுகாப்புடன் அந்த சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது.
கோவை : ( 88704-72171 )
ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம் 10/04/2016 அன்று காந்திபுரத்தில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை,கோவை மாநகராட்சி அலுவலக நடைமுறைகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் 108 மருத்துவ ஊர்தி தொடர்பான கடந்த ஒரு வருட தகவல் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்ட மனு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் - புதிய சக்தி அணி
மே16, 2016 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலில்
போட்டியிடும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களை ஊக்குவிக்கும், ஒருங்கிணைக்கும்
முயற்சியே புதிய சக்தி அணி ஆகும். நல்லோர் வட்டம், லோக் சத்தா கட்சி, புரவிகள்
இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பல்வேறு
சமூகநல அமைப்புகள் ஒன்று சேர்ந்து இம்முயற்சியை முன்னெடுக்கிறது. பல்வேறு
மாவட்டங்களைச் சேர்ந்த 28 வேட்பாளர்கள் புதிய சக்தி அணி வேட்பாளர்களாக தேர்தலில்
போட்டியிடுகிறார்கள். மேலும், ஒத்த
எண்ணமுள்ள சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், கட்சிகளின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள
பல வேட்பாளர்களுக்கு புதிய சக்தி அணி ஆதரவளிக்கிறது, தகுதியான வேட்பாளர் இவர் என
அடையாளங் காட்டுகிறது.
6. சட்ட பஞ்சாயத்து இயக்கம் பங்கேற்ற தொலைக்காட்சி விவாத
நிகழ்ச்சிகள் :
1.
மக்கள் தொலைக்காட்சி: “ஜெ.
சொத்துகுவிப்பு வழக்கு” (6-4-2016)
2.
சன் நியூஸ் : அதிமுகவின்
மதுவிலக்கு அறிவிப்பு குறித்து (9-4-2016)
3.
நியூஸ் 7 : திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து (12-4-2016)
4.
புதிய தலைமுறை: வட்ட
மேசை விவாதம் – பொது சுகாதாரம்(21-4-2016)
5.
தந்தி
: வேட்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது குறித்து(22-3-2016)
6.
சன் நியூஸ்:
மதுவிலக்கு குறித்து (23-4-2016)
7.
தந்தி :
அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்து(23-4-2016)
8.
புதிய தலைமுறை :
வட்ட மேசை விவாதம் – தொழிலாளர் நலன்(28-4-2016)
9.
தந்தி
– கிரானைட் கொள்ளை தொடர்பாக(28-4-2016)
7. பத்திரிகைகளில் இயக்க செய்திகள் :
7.1: THE HINDU(13-04-2016): “Villagers want mining
permit cancelled; threaten to boycott poll” நெல்லை
மாவட்டம், கடம்போடு வாழ்வு கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட கிரானைட் குவாரியை
எதிர்த்து சட்ட பஞ்சாயத்து இயக்கப் போராட்டம். (http://www.thehindu.com/news/national/tamil-nadu/villagers-want-mining-permit-cancelled-threaten-to-boycott-poll/article8469435.ece )
7.2 THE HINDU(29-04-2016) – ” Nitty-gritty of prohibition debate”
மதுவிலக்கு குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்
தலைவர் சிவ.இளங்கோவின் கருத்து (http://www.thehindu.com/news/cities/chennai/nittygritty-of-prohibition-debate/article8534676.ece )
7.3: இரயில் நிலையங்களில் கழிப்பறை, குடிநீர் செய்துதரக் கோரிய சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுநலவழக்கு குறித்த செய்திகள்: ( 16-04-2016 )
7.3.1 INDIAN EXPRESS: http://www.newindianexpress.com/cities/chennai/No-Progress-On-Facilities-Railway-Indicted/2016/04/16/article3382542.ece
7.3.2: THE HINDU http://www.thehindu.com/news/cities/chennai/provide-water-toilets-by-july-15-hc-tells-southern-railway/article8485577.ece
8. இயக்கத்தின் சார்பாக வெளியான கட்டுரைகள்:
சமூகப்பிரச்னைகள் தொடர்பாக இயக்கத்தின் பார்வை,
நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும்விதமாக நாளிதழ், வார இதழ்களில் கட்டுரைகளை எழுதி
வருகிறோம். ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு..
12-4-2016: மின்னம்பலம் –
மதுவிலக்கு-30ஆயிரம் கோடிக்கு மாற்றுவருவாய் வழி
13-4-2016: தினமலர் – “தேவை-விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்”
17-04-2016: கல்கி – “ஓட்டுக்குப் பணம் – யார் காரணம், எது தீர்வு” ?
13-4-2016: தினமலர் – “தேவை-விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்”
17-04-2016: கல்கி – “ஓட்டுக்குப் பணம் – யார் காரணம், எது தீர்வு” ?
24-04-2016: கல்கி - ”2016
மதுவிலக்கு ஆண்டு”
9. வெற்றிச் சம்பவங்கள்: இயக்கத்தின் சட்ட வழிகாட்டுதலின் மூலம் மாதந்தோறும் பலநூறுபேர்
பயன்பெற்று வருகிறார்கள். அவற்றிலிருந்து ஒரு சில உங்கள் பார்வைக்கு…
மதுரை மாவட்டம் தா.வாடிப்பட்டி, சடையாண்டிக் கோவில்
தெருவை சேர்ந்தவர் கண்ணன்.கூலித் தொழிலாளி.இவரது மகன் விஜய்கிருஷ்ணன் குடும்பத்தில்
முதல் பட்டதாரி. B.PHARM பயில
|
மதுரை வாடிப்பட்டியிலுள்ள பேங்க் ஆப் இந்தியாவில்
கல்விக் கடன் கேட்டு உரிய ஆவணங்களோடு கடந்த ஆண்டு(22-05-2015) விண்ணப்பித்துள்ளார்
சம்மந்தப்பட்ட வங்கி, கடன் கோரும் மனுதாரரை
இன்று போய் நாளை வா என்று கடந்த ஓராண்டாக இழுத்தடித்த நிலையில் சட்டபஞ்சாயத்து இயக்கத்தின்
வழிகாட்டுதலால், முயற்சியால்(ரிசர்வ் பேங்க் வங்கி குறை தீர்ப்போர் ஆகியோருக்கு தபால்
மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் உரிய புகார்கள் பதிவு செய்ததின் அடிப்படையில்) கடந்த
15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று ரூ 55,000 க்கான கல்விக்கடன் காசோலையை வங்கி வழங்கியுள்ளது.(மொத்தம்
ரூ.2.5 லட்சத்திற்கு கல்விக்கடன் கிடைத்துள்ளது)
|
ஆயிரம்மங்கலம் அண்ணாமலைக்கு 4 ஆண்டுகளாக கிடைக்காத திருமண உதவித்தொகை SPI மூலம் கிடைத்தது.
வேலூர் மாவட்டம், ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 53). இவர் ஒரு கட்டுமான கடந்த |
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளார். வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளரின் பிள்ளைகளின் திருமண உதவித்தொகை ரூ 3000 வேண்டி கடந்த 2012 ல் விண்ணப்பித்துள்ளார். 4ஆண்டுகளாக இதோ / அதோ என்று இழுக்கடித்து, அலைய விட்டது வாரியம். பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான திரு. அண்ணாமலை நமது இயக்க கால்சென்டருக்கு (7667 100 100) தொடர்பு கொண்டு வழிமுறை தகவல் பெற்றார். சனிக்கிழமை முகாமிற்கு வந்து ஆலோசனை பெற்று செயல்படுத்தினார். தற்போது உதவித்தொகை ரூ 3000 மணியார்டரில் வீடு தேடி வந்தது.
முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை. |
10.
வரவு செலவு அறிக்கை: ( ஏப்ரல் 2016 )
வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் நம் இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது. மேலும், நமக்கு நன்கொடை அளிக்கும் ஆர்வலர்களுக்கு தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது. கடந்த 33 மாதங்களாக இயக்கத்தின் வரவு செலவுகளை இணையத்தில் வெளியிட்டுவருகிறோம். http://spiaccounts.blogspot.in
இயக்கத்தின் செயல்பாடுகள் தொய்வின்றித் தொடர
தங்களின் நிதி்யுதவியை எதிர்பார்க்கிறோம். இணையம் மூலம் நன்கொடை அளிக்க: http://donate.sattam.org
குறிப்பு: நன்கொடை அளிப்பவர்கள்,
நன்கொடை குறித்தான விவரங்களை spiaccts@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
நன்றி,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
5/5/2016
5/5/2016